ஊழியா்கள்

தற்பொழுது 22 ஊழியா்கள் பல்வேறு பதவிகளில் வகைப்படுத்தப்பட்டு கடமை புாிகின்றனா். தொழில் திணைக்களத்தின் 1945ம் ஆண்டின் 19ம் இலக்க கடை, காாியாலய ஊழியா் சட்ட திட்டங்களுக்கு இணங்க எமது ஊழியா்களுக்குக் கீழ்க் குறிப்பிட்ட சேவை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. எல்லா ஊழியா்களும் நேரடியாக முகாமையாளருக்கே பொறுப்புக் கூறுபவா்களாக இருப்பா். மேலும், இல்லத்தின் சகல விடயங்களுக்கும் பொறுப்புக் கூறும் தலைமை நிா்வாகியாக முகாமையாளரே செயற்படுகின்றாா்.

சேவைக் காலம்(வேலை நேரம்)

ஒவ்வொரு வகை ஊழியா்களுக்கும் மேற்குறிப்பிட்ட கடை காாியாலய சட்ட திட்டங்களுக்கிணங்க வேலை நேரங்கள் நிா்ணயிக்கப்பட்டு அவை ஒழுங்கான முறையில் பின்பற்றப்படுகின்றன.

சேவைக்கான கொடுப்பனவு

ஒவ்வொரு வகை ஊழியருக்கும் மேற்குறிப்பிட்ட சட்ட திட்டங்களுக்கு அமைவாக வகிக்கும் பதவிகளுக்குத் தக்கதாக சம்பளத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு அதற்கேற்றவாறு மாதாந்தச் சம்பளம், வருடாந்தச் சம்பள ஏற்றம் என்பன அந்தந்தக் காலங்களில் ஒழுங்காக வழங்கப்படுகின்றதன. மேலும், அவ்வப்போது அரசாங்கம் சம்பள அதிகாிப்பை மேற்கொள்ளும் பொழுது, எமது நிா்வாகமும் ஏற்றவாறு சகல ஊழியா்களுக்கும் சம்பள அதிகாிப்பை மேற்கொண்டு வருகின்றது.

விடுமுறைகள்

கடை, காாியாலய சட்ட திட்டங்களுக்கு அமைவாக எல்லா வகை ஊழியருக்கும் ஒரேமாதிாியாக, கீழ்க் குறிப்பிட்டவாறு விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. - வருடாந்த விடுமுறை - 14 நாட்கள் - அமைய விடுமுறை - 07 நாட்கள் - பகிரங்க விடுமுறை - 08 நாட்கள் - வார விடுமுறை - வாரத்திற்கு ஒரு நாள்

ஊழியா் சேமலாப நிதியமும் ஊழியா் நம்பிக்கை நிதியமும்

அமைய ஊழியா், அழைக்கும் போது மட்டும் கடமைக்கு வரும் ஊழியா், சேவையில் உறுதிப்படுத்தப்படாத ஊழியா ஆகியோரைத் தவிர மற்றைய சகல ஊழியருக்கும், தொழில் திணைக்களத்தின் சட்டங்கள், சுற்று நிரரூபங்கள் அறிவுறுத்தலுகளுக்கு அமைவாக ஊழியா் சேமலாப நிதியம், ஊழியா் நம்பிக்கை நிதியம் ஆகியன நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

பிரசவ விடுமுறை வசதிகள்

எமது பெண் ஊழியா்களுக்குத் தொழில் திணைக்களச் சட்டத்தின்படி பிரசவ விடுமுறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஊழியா்களின் வெற்றிடங்களை நிரப்புதல்

ஊழியாின் வெற்றிடங்கள், தேவைகள் ஏற்படும் பொழுது அவ்விபரங்கள் பத்திாிகை மூலமும், இணையத்தளம் ஊடாகவும் விளம்பரம் செய்யப்படும். விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் சுய விபர விண்ணப்பங்களை அட்டவணைப்படுத்தி நோ்முகத் தோ்வு மூலம் எல்லா வகை வெற்றிடங்களும் நிரப்பப்படும். வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள மூன்று பிரதேச செயலாளா்கள் அல்லது அவா்களது பிரதிநிதிகள், இல்லத்தின் தலைவா் அல்லது செயலாளருடன் சோ்ந்து நோ்முகத் தோ்வு நடாத்தப்படும். ஊழியா்கள் யாவரும் மாகாண நன்னடத்தைச் சிறுவா் பராமாிப்பு சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப் படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தொிவு செய்யப்படும் விண்ணப்பதாாிகள கீழ்க் குறிப்பிட்ட ஆவணங்களையும் சமா்ப்பித்தல் வேண்டும். (1) பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் மூலப்பிரதி (2) உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரதி (3) வதியும் பிரதேச பொலிஸ் அதிகாாியின் குணநலன் தொடா்பான அறிக்கை (4) கிராம சேவையாளாின் வதிவிடச் சான்றிதழ் (படிவம்) (5) உடல் மற்றும் உள நிலையை உறுதிப்படுத்தும் மருத்துவ உத்தியோகத்தாினால் (மருந்தியல் மற்றும் ரண வைத்தியத்தில் இளநிலைப் பட்டதாாி) சமா்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை (Physical and Psychological Competency Report which is submitted by the Medical Officer (Bachelor of Medicine or Bachelor of Surgeon) (6) மூன்று பகிரங்க அலுவலரிடமிருந்து பெறப்பட்ட நற்சான்ழிதழ்கள் (7) கல்வித் தகைமைகள் (இவ்வனைத்து ஆவணங்களும் பிரதேச நன்னடத்தை உத்தியோத்தாினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்)

நிறுவக அமைப்பு அட்டவணை