காசு அன்பளிப்புக்கள்
பொதுமக்களின் விருப்பத்துக்கேற்ப அவர்களுடைய நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு பொதுமக்களிடமிருந்து அன்றாடம் அன்பளிப்பாக நிதிகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது, பிறந்த நாள், இறப்பு நினைவு தினம், அந்தியேஷ்டி, விரத நாட்கள், திருமணநாள், விசேட தினங்கள், போன்ற பல்வேறு காரணங்களுக்காக பொது மக்களால் அன்பளிப்புச் செய்யப்படுகின்றது. இவ்வாறான அன்பளிப்புகளுக்கு உரித்தான நாட்களில் சம்பந்தப்பட்ட குடும்ப அங்கத்தினரும் அழைக்கப்பட்டு நோக்கத்திற்குரியவரையும் நினைவு கூர்ந்து அன்றைய தினத்தில் மதிய போசன அன்னதான நிகழ்வு நடைபெறுவது வழமை.
அன்பளிப்பு நிதிகளைச் செலுத்துவதற்கான விபரங்களும் அறிவுறுத்தல்களும் வருமாறு:
நேரடியாகவோ, வங்கிக் கணக்குகள் மூலமோ, காசோலை மூலமோ, அல்லது காசுக் கட்டளை மூலமோ பணத்தினைச் செலுத்தலாம். சகலவற்றிற்கும் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும்.
(அ) இல்லத்தின் பெயர்: ஸ்ரீ பரமானந்தா சிறுவர் முதியோர் இல்லம்.(Sri Paramananda Children’s & Elders’ Home)
(ஆ) முகவரி: வதிரி, கரவெட்டி. (Vathiry, Karaveddy)
(இ) வங்கிக் கணக்குகள்:
(1) | மக்கள் வங்கி, நெல்லியடி (People’s Bank, Nelliady) | நடைமுறைக் கணக்கு இல. (Current A/C No.): 106100190000166 | (Swift Code – P.S.BKLKLX-023) |
(2) | இலங்கை வங்கி, நெல்லியடி (Bank of Ceylon, Nelliady) | நடைமுறைக் கணக்கு இல. (Current A/C No.): 7380870 | (Swift Code – BCEYLKLX-638) |
(3) | கொமர்ஷல் வங்கி, நெல்லியடி (Commercial Bank, Nelliady) | சேமிப்புக் கணக்கு இல. (Savings A/C No.): 8108032942 | (Swift Code – CCEYLKLX) |
(4) | ஹற்றன் நஷனல் வங்கி, நெல்லியடி (Hatton National Bank, Nelliady) | சேமிப்புக் கணக்கு இல. (Savings A/C No.): 118020104852 | |
(5) | தேசிய சேமிப்பு வங்கி, நெல்லியடி ( National Savings Bank, Nelliady) | சேமிப்புக் கணக்கு இல. (Savings A/C No.): 100320254509 |
(ஈ)அன்பளிப்புப் பணத்தை நேரடியாக வங்கி வைப்பிலிடும் சந்தர்ப்பங்களில் கீழ்க் குறிப்பிட்ட விபரங்களை எமக்குத் தெரியப்படுத்தும்படி தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். வங்கிப் பணவைப்புச் சிட்டையின் அல்லது அதன் பிரதியின் பின்புறத்தில் கீழ் வரும் விபரங்களைக் குறிப்பிட்டு எமக்குத் தபாலில் அனுப்பி வைக்கலாம். எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தெரியப் படுத்தலாம். ஸ்ரீபரமானந்தா இல்லத்துடன் தொடர்பு கொள்ளும் விபரங்கள் முதற் பக்கத்தில் இருக்கின்றன.
- வைப்பிலிட்ட வங்கியின் பெயர், திகதி, தொகை
- அன்பளிப்புச் செய்பவரின் முழுப் பெயரும் முகவரியும்:
- அன்பளிப்புச் செய்வதன் நோக்கம் அல்லது நிகழ்வு
- நிகழ்வுத் திகதி
- நிகழ்வுக்கு உரியவரின் பெயர் (இவ்விபரங்கள் கிடைத்த பின்னர் வங்கி வைப்பிலிட்ட தொகைக்கான பற்றுச் சீட்டு தபாலில் அல்லது மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
(உ) காசோலை மூலம் பணம் செலுத்துவதாயின் “பெறுநர் கணக்கு” (A/C Payee) எனக் குறுக்குக் கோடிடவும். மேலே (ஈ) பிரிவில் கோரப்பட்ட விபரங்களையும் தெரியப்படுத்தவும்.
(ஊ) தபால் அலுவலகம் ஊடாகக் காசுக் கட்டளை மூலம் பணம் செலுத்துவதாயின் தபால் அலுவலகம் வதிரி அல்லது கரவெட்டி எனக் குறிப்பிடவும். மேலே (ஈ) பிரிவில் கோரப்பட்ட விபரங்களையும் தெரியப்படுத்தவும்.
(எ) அலுவலக நேரம்: எல்லா நாட்களும் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 வரை