சிறுவர்கள்:
சிறுவர்கள் நல்லவராவதும் தீயவராவதும் அவர்களது சூழல் குடும்ப நிலைமை, கூடப் பழகுவோர், நண்பர்கள் போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறதென்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். பாலியல் வன்முறைகள், வறுமை, போஷாக்கின்மை, பாடசாலைகளுக்குச் செல்லாமை, தங்குமிடங்களில் கொடுமைகள், சித்திரவதை, குரூரமாக நடாத்துதல், ஆசிரியர்களால் பாலியல் துஷ்பிரயோகம், குற்றச் செயல்களுக்குப் பாரிய தண்டனை வழங்குதல் போன்ற காரணிகளால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைப் பத்திரிகைகள் வாயிலாக அதிகமாக அறியக் கிடைக்கின்றது. சிறுவர் நலனுக்காகச் சர்வதேச ஒன்றியத்தினால் வரையப்பட்ட சிறுவர் உரிமைகள் பிரகடனத்தை இலங்கை உட்பட உலக நாடுகள் பல ஏற்றுக் கொண்டுள்ளன. சிறுவரின் உடல்சார் ஒழுக்கம், ஆன்மீகவிருத்தி, பட்டினி, நோய், விசேட தேவையுடையோர், தனிமையைத் தவிர்த்தல், சுகாதார வசதிகள், கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம், போதிய கல்வியைப் பெறும் உரிமை, அனாதரவான சிறுவர்கள் போன்ற விடயங்கள் இப்பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஸ்ரீபரமானந்தா சிறுவர் முதியோர் இல்லத்தின் தர்மகர்த்தா சபை உறுப்பினர்களின் மாதாந்தக் கூட்டங்களில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஒவ்வொன்றும் அலசி ஆராயப்பட்டு நடைமுறைப் படுத்தும் வழிவகைகள் தீர்மானிக்கப்பட்டுச் செயற்படுத்தப் படுகின்றன என்பதைப் பொறுப்புடன் குறிப்பிட விரும்புகிறோம்.
(அ) சிறுவர்களை உள்வாங்கும் நடைமுறைகள்: ஸ்ரீபரமானந்தா இல்லமானது அரச கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் கீழ்க்குறிப்பிட்ட இரண்டு வழிகளில் மட்டுமே உள்வாங்கப் படுகின்றனர். தற்பொழுது பெண் சிறுவர்கள் மட்டுமே இவ்வில்லத்தில் வைத்துப் பராமரிக்கப் படுகின்றனர். மேலும் 06 வயது தொடக்கம் 18 வயது வரையுள்ள பாடசாலை செல்லும் பெண் சிறுவர்கள் மாத்திரம் எமது இல்லத்தில் உள்வாங்கப் படுகின்றனர். ஆண் பெண் சிறுவர்களை ஒரே வளாகத்தினுள் வெவ்வேறான கட்டிடங்களில் வைத்துப் பராமரிப்பதற்கு அனுமதியில்லாத படியால் பிரதான வளாகத்துக்கு வெளியே காணியொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதில் வேறான ஒரு இல்லம் அமைத்தபின்னர் ஆண் சிறுவர்களை உள்வாங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இல்லத்தால் நேரடியாகச் சிறுவர்களை உள்வாங்க முடியாது. தற்பொழுது எமது இல்லத்தில் 59 சிறுவர்கள் பராமரிக்கப்படுகின்றனர்.
- நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளரின் அனுமதியுடன் இணைத்தல் ஒவ்வொரு பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர் ஒருவர் இருப்பார். வறுமை நிலையிலுள்ள ஒரு சிறுமியை இவ்வில்லத்தில் இணைக்க வேண்டுமாயின் அந்தந்தக் கிராம உத்தியோகத்தரூடாக நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தருக்கு அச்சிறுமிக்குப் பொறுப்பாக இருப்பவர் விண்ணப்பம் மேற்கொள்ளல் வேணடும். குறிப்பிட்ட சிறுமி எமது இல்லத்தில் வசிப்பதற்குத் தகுதியுடையவராக இருந்தால் நன்னடத்தைசிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர் தனது சிபார்சுடன் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளரின் அனுமதியைப் பெற்று பொருத்தமான சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைப்பார்.
- நீதிமன்றக் கட்டளை மூலம் இணைத்தல் நீதிமன்ற விசாரணைகள் மூலம் குறிப்பிட்ட சிறுமியை, பெற்றாருடனோ அல்லது உறவினருடனோ அனுப்புவது உசிதமல்ல என்று தீர்மானிக்கப்பட்டால் நீதிமன்றக் கட்டளையூடாக சிறுவா் பராமரிப்பு இல்லங்களில் ஒன்றினுள் உள்வாங்கப் படுகின்றாா்.
(ஆ) சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள்: பாடசாலைக் கல்வி எமது இல்லச் சிறுவர்கள் யாவரும் பாடசாலை செல்லும் மாணவர்களே. முதலாம் வகுப்புத் தொடக்கம் க.பொ.த.(உ.த) வரை கல்வி கற்கின்றனர். இவர்களுடைய வகுப்புகள், பாட விதானங்களுக்கேற்ப பொருத்தமான கீழ்க் குறிப்பிட்ட மூன்று பாடசாலைகளில் கல்வி கற்றுவருகின்றனர். பாடசாலைகளுக்குச் செல்லும் பொழுதும், பாடசாலை முடிவடைந்து திரும்பவரும் பொழுதும் பாதுகாப்புக்காகக் கூடப் போய் வருவதற்காக சிறுவர் மேற்பார்வையாளர்களின் உதவி பெற்றுக் கொள்ளப்படுகின்றது. பிள்ளைகளைப் பாடசாலைக்குஏற்றி இறக்கும் பொருட்டு ஒரு ஹயஸ் வாகனம் கொள்முதல் செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. 1. நெல்லியடி மத்திய கல்லூரி 2. வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி 3. சின்னத்தம்பி வித்தியாலயம் பிரத்தியேகக் கல்வி தற்பொழுது இல்லப் பிள்ளைகள் யாவருக்கும் எல்லாப் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு இல்லத்திலேயே பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. க.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்குச் சில பாடங்களுக்கான ஆசிரியர்களை ஒழுங்கு செய்ய முடியாத சந்தர்ப்பங்களில் வெளியிலுள்ள பிரத்தியேகக் கல்வி நிறுவனங்களில் கற்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிறுவர்களின் கல்விப் பெறுபேறுகள்: கடந்த மூன்று வருடஙக்ளில் க.பொ.த.(உ.த.), க.பொ.த.(சா.த.) பரீட்சைகளில் சித்தியெய்திய எமது மாணவர்களின் தற்போதைய நிலைமைகளைப் பார்க்கும் பொழுது எமது கல்வி நடவடிககைகளில் திருப்தியடையக் கூடியதாக உள்ளது. அதன் விபரங்கள் வருமாறு: - 2017 ம் வருடம் க.பொ.த.(உ.த.) 06 பிள்ளைகள் சித்தியெய்தியுள்ளனர். க.சிந்துஜா - கலைப்பிரிவு நா.சாளினி - கலைப்பிரிவு வி.மதுஷா - கலைப்பிரிவு ர.சபீதா - வர்த்தகம் கோ.மயூரா - கலைப்பிரிவு 2வது தடவை (பல்கலைக் கழக அனுமதியை எதிர்பாக்கப்படுகிறது) கோ.சுஜா - உயிரியில் தொழில் நுட்பம் (2ஆவது தடவை) - 2016 ம் வருடம் க.பொ.த.(உ.த.) 05 பிள்ளைகள் சித்தியெய்தியுள்ளனர். ச.வசந்தனா - கலைப்பிரிவு கோ.மயூரா - கலைப்பிரிவு கோ.சுஜா - உயிரியல் தொழில் நுட்பம் தனிப்பட்ட கல்வி நிறுவனத்தில் Diploma in Quantity Surveying செய்கின்றார். சி.திலீபா - நுண்கலைப்பிரிவு (பல்கலைக் கழகம் கிடைக்கவிருந்தும் விவாகம் செய்து வெளிநாடு சென்று விட்டார். க.கஜீதா - உயிரியல் தொழில் நுட்பம் (தனிப்பட்ட கல்வி நிறுவனத்தில் Diploma in Quantity Surveying செய்கின்றார். - 2015 ம் வருடம் க.பொ.த.(உ.த.) 05 பிள்ளைகள் சித்தியெய்தியுள்ளனர். இ.புஷ்பமதி - கணிதப்பிரிவு (Electrical Electronic in H.N.D.E, Jaffna) ம.லக்ஷனா - கலைப்பிரிவு ச.அகிம்சா - உயிரியல் தொழில் நுட்பம் (Information Technology in Moratuwa University) ச.சஞ்ஜிகா - கலைப்பிரிவு (யாழ் பல்கலைக்கழகம்) இ.சஜிந்தனா - கணிதப்பிரிவு தனிப்பட்ட கல்வி நிறுவனத்தில் Diploma in Civil Engineering - 2016 ம் வருடம் க.பொ.த.(சா.த.) 06 பிள்ளைகள் சித்தியெய்தியுள்ளனர். உ.நிதா பே.விக்னா ஸ்ரீ.அனுஷியா க.கிந்துஷா இ.தேன்நிலா தே.சுஜித்தா - 2015 ம் வருடம் க.பொ.த.(சா.த.) 09 பிள்ளைகள் சித்தியெய்தியுள்ளனர். க.கம்ஷா இ.ஷாலினி கு.நிதுஷா செ.விதுஷா வ.டிலக்சனா அ.அனுசீலி பா.பனுஷா த.இந்துஷா உ.யுவர்ணா
(இ) சிறுவர்களுக்கான விளையாட்டு வசதிகள்: அளவில் சிறிதென்றாலும் பிள்ளைகள் விளையாடுவதெற்கென அளவிற் சிறியதெனினும் விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. அன்பளிப்பு மூலம் கிடைக்கப்பெற்ற மைதான விளையாட்டுகள், உள் விளையாட்டுகள் போன்றவற்றிறக்கென விளையாட்டு உபகரணங்களும் இருக்கின்றன. வீடுகளில் வசிக்கும் பிள்ளைகள் போன்று பிரத்தியேக வகுப்புகள் காரணமாக விளையாடுவதற்குரிய நேரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் உள்ளது. என்றாலும் சில பிள்ளைகள் கிடைக்கும் நேரங்களில் சேர்ந்து விளையாடுகின்றனர். இவ்விடயம் ஆலோசனையில் உள்ளது.
(ஈ) 2016 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வடக்கு மாகாண சிறுவர் அபிவிருத்தி நிலைய நியதிச்சட்டம்: மேற்படி நியதிச் சட்டம் 25.11.2016 ஆம் திகதிய இலங்கை அரசின் பகுதிIV (அ)வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த நியதிச் சட்டங்களுக்கு இணங்க எமது ஸ்ரீ பரமானந்தா இல்லச் சிறுவர்களின் வினைத்திறனான முகாமை மற்றும் நிருவகித்தலை உறுதிப்படுத்துகின்ற பொறுப்பு சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புச் சேவைகளின் மாகாண ஆணையாளரைச் சார்ந்ததாகும். மாகாண ஆணையாளரின் சுற்று நிருபங்களுக்கிணங்க எமது இல்லத்தின் சிறுவர் பகுதி “ஸ்ரீ பரமானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையம்” என்ற பெயரில் மாகாண ஆணையாளரால் பதிவு செய்யப்பட்டு 01.01.2018 ஆம் திகதி தொடக்கம் இயங்கி வருகின்றது என்பதைப் பணிவன்புடன் அறியத் தருகின்றோம். மேலும் சிறுவர்களின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் மாகாண ஆணையாளரின் சுற்று நிருபங்கள், அறிவுறுத்தல்களுக்கு அமையவே நடைமுறைப் படுத்தப்படுகின்றன.