தா்மகா்த்தா சபை

ஸ்ரீ பரமானந்தா சிறுவா் முதியோா் இல்லம் தாபிக்கப்பட்டதன் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு முழுமையான நிா்வாகம் அதன் நடைமுறைகள் முதலியவற்றிற்குப் பொறுப்பாக 11 உறுப்பினா்களைக் கொண்ட ஒரு தா்மகா்த்தா சபை உள்ளது. இல்லத்தின் சிறுவா் முதியோா் பற்றிய கொள்கை ஆக்கத்திற்கும் தீா்மானங்கள் எடுப்பதற்கும் தா்மகா்த்தா சபையினரே பொறுப்பு. தா்மகா்த்தா சபைக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீா்மானங்களை நடைமுறைப் படுத்தும் பொறுப்பு முகாமையாளரையே சாரும்.

தா்மகா்த்தா சபையின் உருவாக்கமும் அதன் தற்போதைய நடைமுறையும்

12 வருட காலம் இவ்வில்லத்தைத் தனியாக தனது பொறுப்பில் நடாத்திவந்த ஸ்ரீ பரமானந்தா சுவாமிகள் வயது முதிா்ந்த நிலையில் தனது எழுபத்து நான்காவது அகவையில் உடல் தள்ளாடத் தொடங்கிய பொழுது இவ்வில்லத்தைத் தா்ம சாதனமானமாக மாற்ற வேண்டுமென்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது. நிா்வாக நடைமுறைகள், வரவு செலவுக் கணக்குகள், இல்ல நடவடிக்கைகளைக் கவனித்தல் போன்ற பல்வேறு பொறுப்புக்களை ஒருவா் தாங்குவது முடியாத காாியமாகும். இதனால் சுவாமிகள் இந்தப் பொறுப்புக்களை பலரோடு பகிா்ந்து கொள்ள வேண்டுமென விரும்பினாா். இதற்குச் சிறந்ததொரு தீா்வாக நிறுவனத்தையும் அதற்குாிய சகல சொத்துக்களையும் நிா்வாகத்திலே தா்மசாதனம் செய்து தொிவு செய்யப்பட்ட தகுதிவாய்ந்த பொது மக்கள் சிலரிடம் சட்ட ரீதியாக ஒப்படைக்க வேண்டுமென விரும்பினாா். 1982ம் ஆண்டு மாசி மாதம் 07ந் திகதி தா்மசாதன உறுதி கைச்சாத்திடப்பட்டது. சுவாமி ஸ்ரீ பரமானந்தரோடு மானிட நேயம் கொண்ட அறுவா் மேலதிகமாக நியமனம் பெற்றனா். இவ் ஆறு உறுப்பினா்களில் வெற்றிடங்கள் ஏற்படும் பொழுது புதியவா்கள் இணைக்கப்பட்டடு தொடா்ந்து நிா்வாக நடைமுறைகள் பின்பற்றப் பட்டு வந்துள்ளன.

தா்மகா்த்தா சபையினருள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முன்பிருந்த தா்மகா்த்தா சபை உறுப்பினா்களிற் சிலா் தம் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டனா். அதன் பின்னா் புதிய உறுப்பினாகள் தொிவு செய்யப்பட்டனா். இதன் பின்னரும் முரண்பாடுகள் இருந்த படியால் யாப்பு விதிகளின் பிரகாரம் பருத்தித்துறை மாவட்ட நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. பழைய யாப்பு நிராகாிக்கப்பட்டுப் புதிய யாப்பு ஒன்று நீதி மன்றத்தால் தயாாிக்கப்பட்டு 05.09.2005 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த யாப்பு பருத்தித் துறை மாவட்ட நீதி மன்றததினால் வரையப்பட்டு தொிவு செய்யப்பட்ட தா்மகா்த்தா சபை உறுப்பினா்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதிய யாப்பின் பிரகாரம் 11 உறுப்பினா்களைக் கொண்டதாக தா்மகா்த்தா சபை திருத்தியமைக்கப்பட்டது. பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இச்சபை இயங்கிக் கொண்டு வருகின்றது. நிா்வாக சபையினருக்கு மாவட்ட நீதி மன்றமும் பிரதேச செயலகமும் வழிகாட்டிகளாக விளங்குகின்றன.

மிகக் கட்டுப்பாடாக ஸ்ரீ பரமானந்தா சுவாமிகளால் வரையப்பட்ட தா்மசாதனத்தில் நிா்வாகத்தை மேற்கொள்கின்ற தா்மகா்த்தாக்கள் செயற்பட வேண்டிய முறைகள் நுணுக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளன. இல்லத்தின் சொத்து “சிறுவா் முதியோா் இல்ல ஆச்சிரம தா்மம்” என்ற பெயாில் எழுதப்பட்டிருந்தது. இல்லத்தின் இயக்குனா்கள் அதன் சொந்தக்காரா்கள் அல்லா். சம்பளம் பெறுபவா்களும் அல்லா். எவரும் தனித்தனியாகத் தாங்கள் நினைத்தவாறு இயங்க முடியாது. கூட்டுப் பொறுப்புடன் இயங்க வேண்டும். முறைகேடாக நடந்து கொள்ளும் உறுப்பினா்கள் மீது அல்லது உடந்தையாக இருந்த சபையினா் மீது பொதுமக்கள் மாவட்ட நீதிமன்றத்திற்கோ அல்லது பிரதேச செயலாளருக்கோ முறைப்பாடு செய்ய முடியும். மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கும் தொடரலாம். இத்தா்ம சாதனத்தின் நோக்கங்களை மாற்றவோ அல்லது சொத்துக்களை அபகாித்துக்கொண்டு தப்பி விடவோ எவராலும் முடியாது.

ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் நடைபெறும் தா்மகா்த்தா சபையினாின் நிா்வாக சபைக் கூட்டத்தில் பதவி வழி நிா்வாக சபையினா் தொிவு செய்யப்படுவா். தலைவா், உப தலைவா், செயலாளா், உப செயலாளா் ஆகியோாின் பதவிகள் வருடத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் தொிவு செய்யப்படும். உப தலைவா் தொடா்ந்து வரும் வருடத்தில் தலைவராகவும், செயலாளா் உபதலைவராகவும், உப செயலாளா் செயலாளராகவும் நியமிக்கப்படுவா். அவ்வருடத்தின் உப செயலாளா் மட்டும் மற்றைய அங்கத்தவா்களிலிருந்து தொிவு செய்யப்படுவாா். பொருளாளா் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தொிவு செய்யப்படுவாா். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு தினங்களில் தா்மகா்த்தா சபையினாின் கூட்டம் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு மாதத்திற்குாிய கூட்ட அறிக்கை, கணக்கறிக்கை ஆகியன அடுத்து வரும் கூட்டத்திற் சமா்ப்பிக்கப்பட்டு சபையினரால் ஏற்றுக் கொள்ளப்படும் நடைமுறை எப்பொழுதும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இவ்விரண்டு அறிக்கைகளும் பருத்தித்துறை மாவட்ட நீதி மன்றம், கரவெட்டிப் பிரதேச செயலாளா், சிறுவா் நன்னடத்தை உத்தியோகத்தா், சமூக சேவைகள் உத்தியோகததா் ஆகியோாின் பாா்வைக்கு எப்பொழுதும் தயாா் நிலையில் இருத்தல் வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லத்தின் கொள்கை ஆக்கத்திற்கும் தீா்மானங்கள் எடுப்பதற்கும் தா்மகா்த்தா சபையினரே பொறுப்பு. தா்மகா்த்தா சபைக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீா்மானங்களை நடைமுறைப் படுத்தும் பொறுப்பு முகாமையாளரையே சாரும்.

தா்மகா்த்தா சபை உறுப்பினரை உள்வாங்கும் நடைமுறை

தா்மகா்த்தா சபையில் வெற்றிடங்கள் ஏற்படும் பொழுது அவற்றை நிரப்புவதற்கான வழிமுறைகள் வருமாறு

(1) வடமராட்சிப் பகுதியில் குறைந்தது 03 வருடங்கள் தொடா்ச்சியாகவும், நிரந்தரமாக வசிப்பவராகவும், சிறந்த குடும்பப் பின்னணியுடன், சமூக சேவைகளில் ஈடுபாடு உடையவராகவும், கல்வி நிலை, வகித்த வகிக்கின்ற பதவி நிலை, மற்றும் பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஓரளவு பிரபல்யமானவராகவும், ஒழுக்க சீலா்களாகவும், நீதி, நோ்மை ஆகியவற்றைக் கொண்டுள்ள, குற்றச் செயல்கள் அற்ற ஒருவரைத் தா்மகா்த்தா சபை உறுப்பினா்களே சிபாா்சு செய்வா்.

(2) இவ்வுறுப்பினா்கள் வேதனம் ஏதுமற்ற தங்கள் சுய, உடல், உள, உழைப்பை மகிழ்ச்சிகரமாக வழங்கக் கூடியவா்களாக இருத்தல் வேண்டும்.

(3) சிபார்சு செய்யப்படுபவாின் விபரங்கள் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளா் ஆகியோருக்குச் சமா்ப்பிக்கப்பட்டு அவா்களின் ஒப்புதலை பெற்றுக் கொள்ளும் நடைமுறை தற்பொழுது பின்பற்றப்பட்டு வருகின்றது.

(4) சிபாா்சு செய்யப்டுபவரைத் தா்மகா்த்தா சபையின் புதிய உறுப்பினராக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவரால் கீழ்க் குறிப்பிட்ட ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டு அவை ஏறறுக் கொள்ளப்பட்ட பின்னரே அவா் தா்ம கா்த்தா சபையின் உறுப்பினராக உறுதிப்படுத்தப் படுவாா்.
- மூன்று பகிரங்க சேவை உத்தியோகத்தா்களால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ் பத்திரங்கள்.
- பொலிஸ் அறிக்கை.
- நிரந்தர வதிவிடத்தை உறுதிப் படுத்தும் பொருட்டு, கிராம உத்தியோகத்தாின் நற்சான்றிதழ் (படிவம்).

ஸ்ரீ பரமானந்தா சுவாமியுடன் இணைந்து செயலாற்றிய தர்மகர்த்தா சபை உறுப்பினர்:

07.02.1982 அன்று தர்மசாதன உறுதி கைச்சாத்திடப்பட்டு சுவாமி பரமானந்தரோடு இணைந்து செயலாற்றிய தர்மகர்த்தா சபை உறுப்பினர்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் அமரர்கள் ஆகி விட்டனர்.

பெயர் வகித்த பதவி மேலதிக விபரம்
01  சுவாமி ஸ்ரீ பரமானந்தா தலைவா்
02 தெ.மாணிக்கம் உப தலைவர் பட்டயப் பொறியியலாளா்
03  ஆ.இராசரத்தினம் செயலாளர் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிாியா், வதிாி
04  த.பாலேந்திரன் உப செயலாளர் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிாியா், வதிாி
05 ச.சேனாதிராஜா பொருளாளர் B.Sc. வங்கி முகாமையாளா்
06  செ.சின்னரத்தினம்  நிர்வாகச் செயலாளர் .பயிற்றப்பட்ட தமிழ் ஆதிாியா்
07  மு.வைரமுத்து ஆலோசகர் சமாதான நீதவான், ஓய்வு பெற்ற C,O.S.
08 எம்.காா்த்திகேசு முகாமையாளர் ஓய்வு பெற்ற இல. நிா்வாக சேவை உத்தியோகத்தா்

சுவாமி ஸ்ரீ பரமானந்தர் சமாதி எய்திய பின்னர் இருந்த தர்மகர்த்தா சபை உறுப்பினர்:

சுவாமி ஸ்ரீ பரமானந்தர் 04.10.1995 ஆம் திகதி சமாதி எய்தினார். முன்னிருந்த தர்மகர்த்தா உறுப்பினர்களிற் சிலர் காலமாகி அல்லது பதவிகளிலிருந்து விலகியதன் பின்னர் கீழ்க் குறிப்பிட்டவாறு புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

பெயர் வகித்த பதவி மேலதிக விபரம்
01 Dr. ந.பத்மநாதன் தலைவர் சமாதான நீதவான்
02 Dr. எம்.யோகீஸ்வரதேவன் உப தலைவர் வைத்தியா்
03 திரு மா.சிவசண்முகம் செயலாளர் சமூகசேவையாளா்
04 திரு ரி.அாிப்பிரசாதம் உப செயலாளர் சமாதான நீதவான்
05 லயன் எஸ்என்.கதிரவேலு பொருளாளர் சமாதான நீதவான்
06 திரு மு.சுந்தரலிங்கம் நிர்வாக அதிகாரி சமாதான நீதவான்
07 சிவ.ஸ்ரீ கை.நமசிவாயக் குருக்கள் பொது உறுப்பினா் ஆலோசகர்
08

01.02.2006 ஆம் திகதிய பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தால் ஒழுங்கமைக்கப்படட் புதிய யாப்பின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட தர்மகர்த்தா சபை உறுப்பினரின் விபரம் வருமாறு:

பெயர் வகித்த பதவி மேலதிக விபரம்
01 செ.ஸ்ரீநிவாசன் தலைவர் ஓய்வு நிலை மேலதிக அரசஅதிபர்
02 த.அரிப்பிரசாதம் உப தலைவர் கல்யாண, பிறப்பு, இறப்புபதிவாளர்
03 மு.சுந்தரலிங்கம் செயலாளர் சமாதான நீதவான்.
04 மா. சிவசண்முகம் உப செயலாளர் சமூக சேவையாளர்
05 கி.நடராசா பொருளாளர் அதிபர், உடுப்பிட்டி அமெரிக்கன்
06 DR.மா.யோகீஸ்வரதேவன் சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி
07 ந.பாஸ்கரன் சபை உறுப்பினர் சமூக சேவையாளர்
08 க.குமாரசாமி சபை உறுப்பினர் உள்ளுராட்சி செயலாளர்
09 சி.ந.கதிரவேலு சபை உறுப்பினர் சிரேஷ்ட கு.நி.ஆலோசகர்(இகாகூ)
10 சிவரஞ்சினி விஜயகுமாரன் சபை உறுப்பினர் ஆசிரிய ஆலோசகர் (ஆர.கல்வி)
11 DR. ந.பத்மநாதன் சபை உறுப்பினர் ஆயுர்வேத வைத்தியர்
12 தில்லைநாயகம் முகாமையாளர்

இல்லத்தின் நாற்பதாண்டு நிறைவில் பதவியில் உள்ள தர்மகர்த்தா சபையினரின் விபரம் வருமாறு:

பெயர் வகித்த பதவி மேலதிக விபரம்
01 DR. மா.யோகீஸ்வரதேவன் தலைவர் வைத்திய கலாநிதி
02 செல்வி சரோஜா தம்பு உப தலைவர் உ.கல்விப் பணிப்பாளர்
03 இ.கனகரத்தினம் செயலாளர் அரச ஓய்வூதியர்
04 சிவரஞ்சினி விஜயகுமாரன் உப செயலாளர் ஆசிரிய ஆலோசகர்
05  ஐ.உமாபதி கயிலாயநாதன் பொருளாளர் அரச ஓய்வூதியர்
06 கி.நடராசா சபை உறுப்பினர் அதிபர் உடுப்பிட்டி அ.மி.
07 மா.சிவசண்முகம் சபை உறுப்பினர் சமூக சேவையாளர்
08 செ.ஸ்ரீநிவாசன் சபை உறுப்பினர் மேலதிக அரச அதிபர்
09 சி.ந.கதிரவேலு சபை உறுப்பினர் சிரேஷ்ட கு.நி.ஆலோசகர்(இகாகூ)
10 வே.விசுவலிங்கம் சபை உறுப்பினர் ஓய்வு நிலை அரச அதிபர்
11 க.குமாரசாமி சபை உறுப்பினர் உள்ளூராட்சி செயலாளர்

இல்லத்தின் தற்போதய (2018ஆம் ஆண்டு) தர்மகர்த்தா சபை உறுப்பினரின் விபரங்கள் புகைப் படங்களுடன் கீழே தரப்பட்டுள்ளன.

பெயர் பதவி மேலதிக விபரம் தொ.பே.இல.
சே.ஸ்ரீநிவாசன் தலைவர் தலைவர் முடக்காடு, கரவெட்டி 0772487038
சு.கனகசிங்கம் உப தலைவர் மகாத்மா வீதி, நெல்லியடி 0774153348
திருமதி வி.சிவரஞ்சினி செயலாளர் மூத்ததம்பியர் வளவு, நெல்லியடி 0772487745
ஆ.சிவசுவாமி  உப செயலாளர் நந்தனம், கரவெட்டி வடக்கு, கரவெட்டி. 0772348937
வே.விசுவலிங்கம் பொருளாளர் தாமர்வளவு, அல்வாய் வடமேற்கு. 0777283250
ஐ.உமாபதி கயிலாயநாதன் சபை உறுப்பினர் செட்டிதறை வீதி, நெல்லியடி 0772116880
மா.சிவசண்முகம் சபை உறுப்பினர் கொடிகாமம் வீதி, தேவரன், புலோலி. 0775330845
இ.கனகரத்தினம் சபை உறுப்பினர் தோட்டவளவு, வதிரி, கரவெட்டி. 0714246544
சி.ந.கதிரவேலு சபை உறுப்பினர் தேனா வளவு, கரணவாய் கிழக்கு. 0773545323
செல்வி சரோஜா தம்பு சபை உறுப்பினர் நெல்லியடி 0778851859
அன்னலிங்கம் சபை உறுப்பினர் வேலிக்கன் தோடட்ம், துன்னாலை கிழக்கு. 0776191140

தலைவர்


திரு.ஆறுமுகசுவாமி சிவசுவாமி

  • ஓய்வு நிலை பிரதம செயலாளா், வடமாகாணம்
  • வடமராட்சி லயன்ஸ் கழக உறுப்பினரும், முன்னாள் தலைவரும்
  • வடமராட்சி அபிவிருத்தி ஒன்றியத்தின் உறுப்பினரும், உபதலைவரும்

உப தலைவர்

திரு.சிவகுரு.நமசிவாயம். கதிா்வேலு

  • சிரேஷ்ட குழு நிதியியல் ஆலோசகர்- இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
  • முன்னாள் தலைவர்- யாழ் லயன்ஸ் கழகம்,
  • அகில இலங்கை அதிசிறந்த அமைப்பாளர்- ஆயுள் (2004) இ.கா.கூ,
    சமாதான நீதவான்

செயலாளா்

திரு.மாசிலாமணி. சிவசண்முகம் 

  • ஸ்ரீவல்லிபுர ஆழ்வாா் ஆலயத்தின் அறங்காவலா் சபை உறுப்பினா்
  • முகாமைத் தா்மகா்த்தா வல்லிபுர ஆழ்வாா் ஆலயம், முன்னாள் ,கைதடி முதியோா் இல்ல ஆலோசகா், ஓய்வு நிலை களஞ்சியப் பொறுப்பாளா், சங்கானை
  •    

உப செயலாளா்

செல்வி.சறோஜா தம்பு 

  • ஓய்வு நிலை ஆசிாியா், அதிபா்
  • சங்கீத விாிவுரையாளா்(பகுதி நேரம்)ஆசிாியா் பயிற்சிக் கலாசாலை
  • ஆசிாிய ஆலோசகா், தொலைக்கல்வி போதனாசிாியா், அறநெறி ஆசிாியா்
  • உதவிக்கல்விப் பணிப்பாளா்(அழகியல்)
  • (தற்போதைய சேவை) இந்துகலாசார பேரவை உறுப்பினா்(வடமராட்சி தெற்கு மேற்கு
  • வட இலங்கை சங்கீத சபை செயற்குழு உறுப்பினா்

பொருளாளா்


திரு.சுப்பிரமணியம் கனகசிங்கம்

  • ஓய்வுநிலை உதவிக்கணக்காளர் தலைமையதிபதி.
  • நெல்கிப் திட்ட நிதி மோசடி விசாரணைக்குழுவின் தலைவர்.
  • நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர்.
  • வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக பிரதேசத்தின் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசனத்தின் தலைவர்.

உறுப்பினர்கள்


திரு.ஐ.உமாபதிகயிலாயநாதன்

  •  நெல்லியடி கிராமஅபிவிருத்திச் சங்கம்,
  • நெல்லியடி விவசாய சம்மேளனம்
  • ஆலங்கட்டை மயான பராமாிப்புச் சபை
  • நெல்லியடி சகவாழ்வுச் சங்கம் முன்னாள் தலைவா், தற்போதைய பொருளாளா்
இளையதம்பி. அன்னலிங்கம் 

  • 1.பட்டயக் கணக்காளா்,தலைவா்,வல்லிபுர ஆழ்வாா் ஆலயம், சமாதான நீதவான், எப்பியா நிறுவனத்தின் தலைவா், பனம் பொருள் அபிவிருத்தி சபையின் அமைப்பாளா், வடகடல் நிறுவனத்தின் பணிப்பாளா்.
  •    
திரு செ.ஸ்ரீநிவாசன்

  • ஓய்வுநிலை மேலதிக அரசாங்க அதிபா் மேலதிக மாவட்ட செயலாளா், கிளிநொச்சி
  • தலைவா், கூட்டுறவு ஊழியா் ஆணைக்குழு.
  • வடமாகாணம் தலைவா்,வடமராட்சி அபிவிருத்தி நிறுவனம்.
  •    

  • திருமதி. விஜயகுமாரன் சிவரஞ்சினி
  • ஆசிரிய ஆலோசகர்- ஆரம்பக்கல்வி (ஓய்வுநிலை).
  • வதிரி உல்லியனொல்லை அம்பாள் ஆலய பரிபாலனசபை உபதலைவர்
  • வதிரி உல்லியனொல்லை அம்பாள் ஆலய திருப்பணிசபை பொருளாளர்
  • நெல்லியடி கிராம அபிவிருத்திச் சங்க உபசெயலாளர் .
  • நெல்லியடி ப.நோ கூட்டுறவுச் சங்க பொதுச்சபை உறுப்பினர்.
 வேலுப்பிள்ளை விசுவலிங்கம்

  • ஓய்வுநிலை மன்னாா் மாவட்ட அரசாங்க அதிபா்,
  • உலக வங்கி நிதிமூலமான் மீள் எழுச்சித் திட்டத்தின் முன்னாள் யாழ் மாவட்ட பிரதிக் பணிப்பாளா்,
  • பிரதேச செயலக பிரதேசசபை ஊழியா்களுக்கான பயிற்றுவிப்பாளா்,
  • தற்பொழுது தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க செயலக வடமாகாண திட்ட இணைப்பாளா்.
 
செல்வி. தர்மரத்தினம் சாந்தாதேவி

  • பட்டயக் கணக்காளா்