நல்வரவாகட்டும் !
அன்புடன் தங்களை வரவேற்கின்றோம்!
ஸ்ரீ பரமானந்தா சிறுவர், முதியோர் இல்லம் பற்றி அறிவதற்காகத் தொடர்பை ஏற்படுத்தியுள்ள தங்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். தயவு செய்து இறுதிவரை தொடருங்கள். ஏனையோருக்கும் தெரியப்படுத்துங்கள். தங்கள் அபிப்பிராயங்களையும் இல்லத்தை மேலும் முன்னேற்றக் கூடியதுமான அறிவுரைகள், ஆலோசனைகள் முதலியவற்றையும் பணிவன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
பணிக் கூற்று
“நாதியற்று வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்பது எம் சேவை. நாதியற்றோர்க்கு மனிதாபிமான உதவிகள், தேவைகளை வழங்குவதே எம் பணி ஆகும்.
தூர நோக்கு
ஆதரவற்றோர், வறுமையுற்றோரை அரவணைத்து அவர்களுக்கு உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளை அளித்து எதிர்காலத்தில் வினைத்திறன் மிக்க பிரஜைகளாக்குவதே எம் நோக்கு.
தொடர்புகளை ஏற்படுத்தும் பொருட்டு:
முகவரி: ஸ்ரீ பரமானந்தா சிறுவர் முதியோர் இல்லம், வதிரி, கரவெட்டி, இலங்கை.
தொ.பே.இல.: 021-2263136 021-2265069
மின்னஞ்சல்: sriparamananda@gmail.com
அலுவலக நேரம்: சகல நாட்களும் காலை 9.00மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அலுவலகம் திறந்திருக்கும்.
அமைவிடம்
இவ்வில்லமானது, யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான பிரதான வீதியில் நெல்லியடிச் சந்திக்கும் மாலிசந்திக்குமிடையில், தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு (ரெலிகொம்) அருகாமையில், இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை எழில் நிறைந்த சோலைச் சூழலில் அமைந்துள்ளது.
(இவ்விணையத் தளத்தின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள அடிக்குறிப்பில் இல்ல அமைவிடத்தை அடைய வேண்டிய வழியைக் காட்டும் வரைபடம் தரப்பட்டுள்ளது)
VISION
Provision of Humanitarian assistance to socially and economically
Vulnerable in the Society
MISSION
Make available the basic necessities in life to destitute and under privileged to
make their life meaningful despite their misfortune
Integrate the beneficiaries of the Ashram into the social fabric and make them
effective components of the society
Equip the beneficiaries with appropriate skill, ability and dynamism to
derive due recognition currently and in future
OBJECTS
Provide food, clothing and accommodation to orphans and destitute children Provide education and appropriate training for those children in the home Provide food, clothing and accommodation for elders identified and admitted to the home Provide religious and recreational facilities to the residents Provide vocational and other training for inmates Pave ways means for the integration of the inmates in to the society Provide counseling and similar support services