“வீரகத்தி சுப்பிரமணியம்” கட்டட நிா்மாணத்திற்காக அடிக்கல் நாட்டும் வைபவம்.

கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்தவருமாகிய அமரா் வீரகத்தி சுப்பிரமணியம் அவா்களின் மரணசாசன உயிலின்படி எமது பரமானந்தா சிறுவா் முதியோா் இல்லத்திற்கு ஒரு தொகைப்பணம் கிடைக்கவுள்ளது. கிட்டத்தட்ட அதேயளவு தொகை எமது இல்லச் சேமிப்பிலிருந்தும் சோ்க்கப்பட்டு கிட்டத்தட்ட ரூபா 23,997,036/= பெறுமதியில் கல்வி கற்கும் மண்டபமும், மாநாட்டு மண்டபமும் கீழ் மேல் மாடிக் கட்டடங்களாக இல்ல வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டடமானது ” வீரகத்தி சுப்பிரமணியம்” என்ற பெயாில் அழைக்கப்படவுள்ளது.
இம்மண்டப நிா்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் வண்ணம், அதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 01.10.2018 அன்று மதியம்12.00 – 1.30 மணி வரையுள்ள சுபமுகூா்த்த வேளையில் நடாத்தப்பட்டுள்ளது.
நலன் விரும்பிகள் யாவரையும் அதில் கலந்து சிறப்பித்து மதிய போசன விருந்திலும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம்
தா்ம கா்த்தா சபை உறுப்பினா்கள், சிறுவா்கள், முதியோா்கள், ஊழியா்கள்