முதியோர்:
மனித வாழ்க்கை முறைமையில் மூத்த பிரஜைகள் சமூகத்தின் வலுவான தூண்கள் எனப் பல கல்விமான்களால் தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட காலமாகப் பெற்ற அனுபவங்கள், வாழ்க்கை நடைமுறைகள், வாழ்வில் சந்தித்த மகிழ்ச்சிகரமானதும் துக்ககரமானதுமான நிகழ்வுகள், பிரச்சினைகளைக் கையாண்ட விதங்கள் போன்றவை வருங்காலச் சந்ததியினருக்கு வழிகாட்டலாக அமையும் என்பது சமூகவியலாளர்களின் கருத்தாக உள்ளது. மூத்த பிரஜைகளைத் தமது சமூகத்தில் வைத்து அவர்களது பிள்ளைகளால், குடும்பத்தினரால் அவர்கள் பராமரிக்கப்படுதல் வேண்டும் என்ற எண்ணக்கருவை அடிப்படையாக வைத்தே முதியோர் நலம் பேணல் செயற்பாடுகள் முதலியன முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை ஜனநாயகக் குடியரசின் 2000ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க முதியோர் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் முதியவர்களை அவர்களின் பிள்ளைகள் பராமரிக்கும் பொறுப்பிலிருந்து விடுபடமுடியாது.
மேற்குறிப்பிடட் வாறு சட்டதிட்டங்கள் இருந்தாலும் அவற்றைப் பின்பற்றி நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. பிள்ளைகள், உற்றார் உறவினர் அற்ற, அனாதரவாகக் கைவிடப்பட்டதும் வசதிகள் இருந்தும் பராமரிப்பின்றி அல்லற்படும் முதியோர் பலரும் சமூகத்தில் இருக்கின்றனர். இவ்வாறானவர்களை உள்வாங்கிப் பராமரிப்பதும் எமது இல்லத்தின் முக்கிய நோகக்ங்களில் ஒன்று. ஒரே வளாகத்தில் இரண்டு வேறுவேறான கட்டிடங்களில் ஆண் பெண் முதியோரை வைத்துப் பராமரிப்பதற்கு சமூக சேவைகள் திணைக்களம் அனுமதிக்காதபடியால் ஸ்ரீபரமானந்தா இல்லத்தின் பிரதான வளாகத்துக்கு வெளியே வேறொரு கட்டிடம் அமைக்கப்பட்டு ஆண் முதியோர் பராமரிக்கப்படுகின்றனர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
ஓவ்வொருவருக்கும் தனித்தனி அறைகளில் மின்சாரம் உட்படச் சகல வசதிகளுடன் தங்குவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.. இயலக்கூடியவர்கள் மூன்று நேரமும் உணவு பரிமாறும் இடத்திற்குச் சென்று உணவை உண்ணும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மற்றையோருக்கு உணவுகள் இருக்குமிடத்திற்குக் கொண்டு சென்று வழங்கப்படுகின்றது.
முதியோரை உள்வாங்கும் நடைமுறைகள்:
தற்சமயம் இவ்வில்லத்தில் தங்கியிருக்கும் முதியோர் மற்றையோரின் உதவியின்றி தம்மைத் தாமே கவனிக்கத் தக்க நிலையிலேயே உள்வாங்கப்பட்டுள்ளனர். முதியோரை உள்வாங்கும் பொழுது தற்காலிகமாக இவ்விடயம் நிர்வாகத்தினால் கவனிக்கப்படுகின்றது. தம்மைத் தாமே கவனிக்கமுடியாத இன்னொருவரின் உதவியை எதிர்பார்க்கும் முதியோரைப் பராமரிக்கும் வசதிகளை தற்சமயம் ஏற்படுத்த முடியாமல் இருப்பதை மிக மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம். பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தியும் இவ்வாறான வேலைக்கு எவரும் முன்வருகிறார்களில்லை. இயலக்கூடிய விரைவில் இக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தயவுடன் அறியத்தருகின்றோம். முதியோர் கீழ்க் குறிப்பிட்ட இரண்டு வழிகளில் மட்டும உள்வாங்கப்படுகின்றனர்.
1. வறுமை, அனாதரவான நிலையிலுள்ள முதியோரை இல்லத்தில் இணைத்தல்:
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பணிமனையிலும் ஒரு சமூகசேவை உத்தியோகத்தர் இருப்பார். கவனிப்பாரற்ற வறுமை நிலையிலுள்ள முதியோர் எவராவது இருந்தால் அவர் தனது நிலைமையை விளக்கத் தனது கிராம உத்தியோகத்தரூடாகச் சமூக சேவை உத்தியோகத்தருக்கு விண்ணப்பித்தல் வேண்டும். அவர் நிலைமையை ஆராய்ந்து இல்லத்தில் இருப்பதற்குத் தகுதியானவராக இருந்தால் பொருத்தமான முதியோர் இல்லத்திற்கு அந்த முதியவரை அனுபப்p வைபப்hர். இவ்வாறு இணைக்கப்படும் எமது இல்ல முதியோருக்கு சகல வசதிகளும் வழங்கப்பட்டு தனித்தனி அறைகளில் வைத்து இலவசமாகப் பராமரிக்கப்படுகின்றனர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
2. பணம் செலுத்தித் தங்கும் முதியோரை இல்லத்தில் இணைத்தல்:
மாதாந்தம் பணம் செலுத்தித் தங்கக் கூடிய முதியோா் கீழ்க் குறிப்பிட்ட நடைமுறை களைப் பின்பற்றி இணைந்து கொள்ளலாம்.
(அ) கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பிரதி எடுத்து ஸ்ரீபரமானந்தா இல்லத்தின் தலைவருக்கு நேரடியாக விண்ணப்பத்தை மேற்கொள்ள முடியும்.
(ஆ) விண்ணப்பதாரி சம்பந்தமான அவசியமான தொடர்புகளுக்காகவும், அவ்வப்போது விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் தேவையான பொழுது பொறுப்பேற்பதற்காகவும் இல்லத்திற்குக் குறிப்பிட்ட முதியவர் இணைய வரும்பொழுது இன்னொருவர் அவரைக் கூட்டிக் கொண்டு வந்து ஒப்படைத்தல் வேண்டும்.
(இ) பணம் செலுத்தி உள்வாங்கப்படும் முதியவர்கள் எமது இல்ல வைத்தியரின் (பகுதி நேரத் தொண்டு முறையில் வருகின்றா் அவா்கள்) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவரின் சிபார்சினைப் பெற்றுக் கொள்வது கட்டயமாக்கப்பட்டுள்ளது.
(ஈ) இல்லத்தில் இணையவிரும்பும் முதியவருக்குக் கணவர் அல்லது மனைவி இருந்தால் அவருடைய ஒப்புதற் கடிதம் உரிய கிராம உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்டுச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். பிரிந்து வாழ்பவராக இருந்தாலும் அதற்காக அத்தாட்சிப் படுத்தப்பட்ட ஆவணம் ஒன்று சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(ஈ) இவ்வாறாக இணையும் முதியோர் இணையும் பொழுது ரூபா 20,000.00 முற்பணமாகச் செலுத்துதல் வேண்டும். இல்லத்தை விட்டு விலகும் பொழுது இத்தொகை மீளளிக்கப்படும்.
(உ) ஒவ்வொரு மாதமும் பராமரிப்புக் கட்டணமாக ரூபா 10,000.00 இல்லத்திற்குச் செலுத்துதல் வேண்டும்.
(ஊ) மேற்குறிப்பிடட் விபரங்களைக் கவனத்திற் கொண்டு தொடர்ந்து வரும் மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பிரதி எடுத்து நிரப்பி ஸ்ரீபரமானந்தா சிறுவர் முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும். நேரடியாகக் கையளிப்பது விரும்பத் தக்கது. விபரங்கள் யாவும் பூரணப்படுத்தப் பட்டிருந்தால் அடுத்து வரும் தர்ம கர்த்தா சபையினரின் கூட்டத்திற் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டால் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.